வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஆதித்ய கரிகாலனாக வியக்க வைத்த விக்ரம்.. அவருக்குள் இவ்வளவு திறமையா

நடிகர் விக்ரம், மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஆதித்ய கரிகாலன் என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான அந்த கதாபாத்திரத்தின் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

மேலும் டீசரில் இடம் பெற்றுள்ள விக்ரமின் நடிப்பும் பலரையும் வியக்க வைத்துள்ளது. இதனால் இந்த படத்தை காண்பதற்கு அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடந்த மற்றொரு சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. அந்த அனைத்து மொழிகளிலும் விக்ரம் தான் அவருடைய கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறார். அதில் அந்த மொழிகளுக்கு ஏற்றவாறு அவருடைய வாய்ஸ் பக்காவாக பொருந்தி இருக்கிறதாம்.

மேலும் ஒவ்வொரு மொழியிலும் அவர் சரளமாக பேசியிருக்கும் அந்த லாங்குவேஜ் அவ்வளவு தெளிவாக பலரையும் கவரும் வகையில் வந்துள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சினிமாவின் மேல் விக்ரமுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது.

இயல்பாகவே விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அதற்காக அவர் எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுப்பார். அது தான் அவரின் கேரக்டர் மக்கள் மத்தியில் நிலைத்திருப்பதற்கு காரணமாக இருக்கிறது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படமும் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் ஆதித்ய கரிகாலனாக மிரட்ட வரும் விக்ரமை திரையில் காண தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர்.

- Advertisement -

Trending News