செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அஜித் பட இயக்குனரை வளைத்துப் போட்ட விக்ரம்.. எல்லாம் அந்த ஒரு விஷயத்துக்கத்தான்

விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனரைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சேதுவில் படத்தில் இருந்து ஒவ்வொரு படத்துக்கு வித்தியாசமான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைப்பவர் விக்ரம். அவர் கடுமையான உழைத்தாலும் சமீபத்தில் நடிக்கும் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதன்படி, பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான படம் தங்கலான். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, முத்துகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா, தனஞ்செயன் இருவரும் தயாரித்திருந்தனர்.

இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. விக்ரம் கடும் உழைப்பை கொடுத்த போதிலும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என பலரும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, சேதுபதி, சித்தா படங்களின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் 62 படத்தில் நடித்து வருகிறார். வீர தீர சூரன் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இதில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர்.ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது.

விக்ரமை இயக்கும் அஜித் பட இயக்குனர்

இப்படத்தை அடுத்து, விக்ரம் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை இயக்கி வரும் மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் விக்ரம் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்தக் கதையை அவர் விக்ரமிடம் கூறியதாகத் தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே தடையறத் தக்க, தடம், கழக தலைவர் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த மகிழ்திருமேனி, ஒரு ஹிட் படத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் விக்ரமின் ரசிகர்களுக்கு பக்கா கமர்சியல், ஆக்சன் படமாக இதை உருவாக்கலாம் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News