நடிகர் விக்ரம் இயக்கத்தில் விஜய் ,அஜித் ? – அழைப்பு விடுத்த விக்ரம்

vikram-vijay-ajithசென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணஉதவி செய்ததோடு நில்லாமல் அடுத்தகட்டத்துக்குப் போயிருக்கிறார் விக்ரம். தமிழ்த்திரையுலகில் உள்ள எராளமான நடிகர் நடிகையரை வைத்து ஒரு பாடலைப் படமாக்கிக்கொண்டிருக்கிறார்.

இதுவரை சூர்யா, விஜயசேதுபதி, பாபிசிம்ஹா, பிரபுதேவா, ஜெயம்ரவி, ஜீவா, பரத், அமலாபால், வரலட்சுமிசரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களோடு விஜய், அஜீத் ஆகிய இருவரையும் இந்தப்பாடலில் தோன்றவேண்டும் என்று விக்ரம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். விஜய், தெறிபடத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார். அஜித், அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கிறார். இருவரும் விக்ரமின் அழைப்பை ஏற்பார்களா? என்று தெரியாமல் விக்ரம் உட்பட அந்தக்குழுவினர் காத்துக்கொண்டிருக்கிறார்களாம்.

Comments

comments

More Cinema News: