ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் அவருக்கு எதிராக அக்‌ஷராஹாசன் களமிறங்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

kamal

கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’, ஆர்.எஸ்.விமலின் ‘மஹாவீர் கர்ணா’, ராஜேஷ்.எம்.செல்வா படம் என சியான் விக்ரம் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. தற்போது, சாமி ஸ்கொயர் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ள விக்ரம் படு பிஸியாக இருக்கிறார். கமலிடம் 17 வருடமாக உதவி இயக்குனராக இருந்தவர் ராஜேஷ் எம்.செல்வா. இவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான தூங்காவனம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இரண்டாவது படத்தில் ராஜேஷ் எம்.செல்வா விக்ரமை இயக்க இருப்பதால் படத்தின் மீதான அதீத எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. காரணம், படத்தை கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. முதலில் இப்படத்தில் நடிக்க வைக்க உலகநாயகனின் முதல் மகள் ஸ்ருதிஹாசனிடம் இப்படத்தின் கதையை கூறி இருக்கிறார் ராஜேஷ். படத்தின் கதை பிடித்து இருந்தாலும், தெலுங்கில் பிஸியாக இருக்கும் ஸ்ருதியால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்தே, இப்படத்தின் முக்கிய வேடமேற்று இருக்கிறார் கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷராஹாசன்.

அதிகம் படித்தவை:  தல57 படத்தில் இரண்டாவது நாயகி ஒப்பந்தம்? கசிந்த தகவல்

தனுஷின் ஷமிதாப் படம் மூலம் நாயகியான அக்‌ஷரா அஜித்தின் விவேகம் படத்தால் தமிழில் அறிமுகமானார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விக்ரம் ஜோடியாக அக்‌ஷராஹாசன் நடிப்பார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், கண்டிப்பா இயக்குனர் ராஜேஷ் அந்த முயற்சியை எடுக்கமாட்டார். இருவரும் ஜோடியாக தெரியமாட்டார்கள் என்பதே படக்குழுவின் கருத்தாகவும் இருக்கும். அப்போ என்ன கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் நடிப்பார் என பலருக்கும் ஆவல் எழுந்தது.

அதிகம் படித்தவை:  அஜித்தின் உதவியாளராக அக்‌ஷரா ஹாசன் !

இந்நிலையில், இப்படத்தில் விக்ரமுக்கு எதிராக ஏறத்தாழ வில்லன் வேடத்தை அக்‌ஷரா செய்ய இருப்பதாக படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதற்கு முன்னர் நடித்த இரண்டு படங்களிலுமே அக்‌ஷராவிற்கு யாருமே எதிர்பார்க்க முடியாத கதாபாத்திரம் என்பதால் அப்பாவை போல் யோசிக்கும் அக்‌ஷரா தொக்கடா வேடத்தில் நடிக்க மாட்டார் என்றே தெரிகிறது. ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் டுவீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.