VijaySethupathi_RMadhavan
Vikram_Vedha

இன்னொரு ஹீரோ உடன் இணைந்து நடிக்கவே மற்ற ஹீரோக்கள் ஈகோ பார்ப்பார்கள். விஜய்சேதுபதி அது பற்றி எல்லாம் யோசிப்பதே இல்லை. கதாபாத்திரம் பிடித்தால் எத்தனை ஹீரோ உடன் வேண்டுமானாலும் நடிப்பார். இறைவி படம் இதற்கொரு உதாரணம்.

தற்போது மாதவன் உடன் இணைந்து விக்ரம்-வேதா என்ற படத்தில் நடித்து வருகிறார். காப் த்ரில்லராக உருவாகியிருக்கும் விக்ரம்-வேதா படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு கேங்ஸ்டர் கேரக்டராம்.

விக்ரம் – வேதா படத்தை புஷ்கர்-காயத்ரி தம்பதி இயக்கியுள்ளனர். ஆர்யா நடித்த ஓரம்போ, மிர்ச்சி சிவா நடித்த வ – குவார்ட்டர் கட்டிங் ஆகிய படங்களை இயக்கியவர்கள். இந்தப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். விக்ரம் – வேதா படத்தின் படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

பாகுபலி- 2 வெளியான பிறகு படத்தை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் மே 26 அல்லது ஜூன் 2 ஆகிய இரு தேதிகளை முடிவு செய்துள்ளனர்.

ஜூன் மாதம் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு விடும் என்பதால் ரிஸ்க் வேண்டாம் மே மாதத்திலேயே படத்தை ரிலீஸ் செய்யும்படி விநியோகஸ்தர்கள் வற்புறுத்துகிறார்களாம்.