Connect with us

Cinemapettai

VijaySethupathi_RMadhavan

Cinema News | சினிமா செய்திகள்

விக்ரம் வேதா பாலிவுட் ரீ-மேக்கில் நடிக்கப்போவது இவரா? புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த “வய் நாட் ஸ்டுடியோஸ்”.

வய் நாட் ஸ்டுடியோஸ், சசிகாந்த் தயாரிப்பில், புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளிவந்து மாஸ் ஹிட் ஆன படம் விக்ரம் வேதா. சில பல நாட்களாகவே இந்தப்படத்தின் ரீமேக் பற்றி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

தெலுங்கில் ‘வெங்கடேஷ்’ மற்றும் ‘ராணா டகுபட்டி’, நடிப்பார்கள் என்றும், கன்னடத்தில் ‘சி ஆர் மனோகர்’ தயாரிப்பில் ‘கிச்சா சுதீப்’ நடிப்பார் என்றும் தகவல் வந்தது. இதில் லேட்டஸ்ட் என்ன வென்றால் இப்படத்தின் பாலிவுட் ரீ மெக்கில் ‘ஷாருக்கான்’ நடிக்கவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவ தொடங்கியது.

இந்நேரத்தில்’ வய் நாட் ஸ்டுடியோஸ்’ தன் ட்விட்டரில் ” படத்தின் ரீ மேக் உரிமையை, நாங்கள்  யாருக்கும் விற்கவில்லை, நாங்களே பிற மொழியில் தயாரிக்கப்போகிறோம். விரைவில் அறிவிப்பு வரும். நன்றி”

ஏற்கனவே தமிழ் மற்றும் ஹிந்தியில் ஹிட் ஆனஇறுதி சுற்றுபடத்தை, இவர்கள் சொந்த பேனரில் தான் தெலுங்கில் வெங்கடேஷை வைத்து தயாரித்தார்கள்.

சினிமாபேட்டை கிசுகிசு: விக்ரம் வேதா ட்ரைலரை வெளியிட்டதே ஷாருக் தான், ஒரு வேலை அவரின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெண்ட் உடன் சேர்ந்து, கோப்ரொடியூஸ் செய்வார்களோ ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top