Connect with us
Cinemapettai

Cinemapettai

உறுதியான விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்.. ஹிந்தி விஜய் சேதுபதி யார் தெரியுமா?

vikram-vedha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உறுதியான விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்.. ஹிந்தி விஜய் சேதுபதி யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் கதையில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்த இந்தத் திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருந்தார்.

தமிழில் வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூலில் மிரள வைத்தது. மேலும் விஜய் சேதுபதியின் சினிமா கேரியரில் இது ஒரு முக்கிய படமாக அமைந்துள்ளது. மேலும் மாதவன் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பதற்கும் சிறந்த படமாக இருந்தது.

இந்த படத்தை நீண்ட காலமாகவே ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. முதலில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாருக்கான், மாதவன் கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கவும் இருந்ததாக செய்திகள் வெளியானது.

ஆனால் இருவரும் தற்போது வேறு படங்களில் பிசியானதால் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வளவு நாட்களாக இந்த செய்தி அரசல் புரசலாக வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாகவே சமூக வலைதளங்களில் விக்ரம் வேதா ரீமேக் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த படம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

vikram-vedha-remake

vikram-vedha-remake

தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இருவரும்தான் ஹிந்தி படத்தையும் இயக்க உள்ளனர். இதற்கான படப்பிடிப்புகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கும் எனவும் செய்திகள் கிடைத்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top