Videos | வீடியோக்கள்
எதிர்பார்ப்புடன் வெளிவந்த விக்ரம் வேதா ஹிந்தி டீசர்.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்
புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விக்ரம் வேதா. ஆக்சன் திரில்லர் பாணியில் வெளிவந்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தாறுமாறாக ஹிட்டடித்தது.
விக்ரம் என்ற போலீஸ் அதிகாரிக்கும் வேதா என்ற கேங்ஸ்டருக்கும் இடையில் நடக்கும் விறுவிறுப்பான ஆட்டம் தான் இந்த விக்ரம் வேதா. திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் வகையில் சுவாரசியத்துடன் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகப்போகிறது என்றதுமே தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Also read : 20 வருடங்களுக்குப் பிறகு இணைந்த மாதவன், சிம்ரன் ஜோடி.. இணையத்தில் ட்ரெண்டாகும் செல்ஃபி புகைப்படம்
ஏனென்றால் விக்ரம், வேதா என்ற கதாபாத்திரங்களுக்கு மாதவன் மற்றும் விஜய் சேதுபதி அத்தனை அம்சமாக பொருந்தி இருந்தனர். அவர்களைத் தவிர அந்த கதாபாத்திரங்களுக்கு வேறு யாரும் உயிர் கொடுக்க முடியாது என்னும் அளவுக்கு அவர்களின் நடிப்பு அற்புதமாக இருந்தது.
இதன் காரணமாகவே தமிழ் ரசிகர்கள் பாலிவுட்டில் இந்த படம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் இருந்தனர். அவர்கள் நினைத்தது போலவே தற்போது வெளியாகி இருக்கும் விக்ரம் வேதா படத்தின் டீசர் ரசிகர்களை அந்த அளவுக்கு கவரவில்லை.
மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும் நடித்திருக்கின்றனர். தமிழ் டிரைலரோடு ஒப்பிட்டு பார்த்தால் இந்த டீசரில் பின்னணி இசை கூட சுமாராகத்தான் இருக்கிறது. அதில் சைப் அலிகான் போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஒரு வகையில் பொருத்தமாக இருக்கிறார்.
Also read : அந்த இயக்குனரிடம் மட்டும் பம்மும் விஜய் சேதுபதி.. காற்றில் பறந்த கண்டிஷன்கள்
ஆனால் ஹிரித்திக் ரோஷன், விஜய் சேதுபதியின் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லாதது போல் தோன்றுகிறது. தமிழ் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு இந்த டீசர் நிச்சயம் ஏமாற்றத்தை மட்டும் தான் கொடுத்திருக்கும்.
தமிழில் எடுக்கப்பட்டது போன்றே கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் ஹிந்திலும் படம் வெளியாகும் என்று அறிவித்த புஷ்கர், காயத்ரி இப்படி ஒரு ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கின்றனர். ஏற்கனவே பாலிவுட்டின் நிலைமை படு மோசமாக இருக்கிறது.
சமீபகாலமாக அங்கு வெளியாகும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் தோல்வியை தழுவி வருகிறது. அதனால் பாலிவுட் திரையுலகில் விக்ரம் வேதா திரைப்படம் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டீசர் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கி இருக்கிறது. ஆக மொத்தம் இந்த பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என்பதுதான் தமிழ் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது.
Also read : விக்ரம் வேதா போல் எதிரும் புதிருமாக நடித்த பிரபல நடிகர்கள்.. மறக்கமுடியாத 5 படங்கள்
