Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் வேதா ஹிந்தி ரீ மேக்கில் நடிக்கப்போகும் கான்கள் யார் யார் தெரியுமா ?
விக்ரம் வேதா தமிழில் ரிலீசாகி மக்களிடையில் பெரும் ஆதரவைப் பெற்ற மாஸன படம். இந்தப் படத்தில் மாதவன் ஹீரோவாகவும் விஜய் சேதுபதி நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார். பிரமிக்க வைக்கும் சிறப்பான கதைக்களத்தை இயக்குனர்கள் புஷ்கர் – காயத்ரி அமைத்திருப்பார்கள். இது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டும் ஆனது.
பல மாதங்களுக்கு முன்பே பாலிவுட்டில் ரீமேக் செய்யப்போவதாக
அறிவித்தனர் எ வை நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட். மேலும் ஒரிஜினல் வெர்ஷன் இயக்கிய ஜோடி தான் ஹிந்தியிலும் படத்தை இயங்குவார்கள் என்று. ஆரம்பத்தில் சல்மான் மற்றும் ஷாருக் என ஆரம்பித்து அமீர் கான் வரை வந்து நின்றது.
Here comes an A-Level Casting… Aamir Khan and Saif Ali Khan are doing #VikramVedha remake… Neeraj Pandey has written the Hindi screenplay and will produce it along with @RelianceEnt & @StudiosYNot… Pushkar-Gayatri who helmed the original will direct… Rolls in March 2020!
— Celebrity Hungama (@celebrityhungma) August 4, 2019
இந்நிலையில் மாதவன் ரோலில் சைப் அலி கான் மற்றும் விஜய் சேதுபதி ரோலில் அமீர் கான் நடிப்பது உறுதியாகி உள்ளது. இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியை நீரஜ் பாண்டே கவனிப்பார்.

vikram vedha remake saif ali khan amir khan
2020 இல் ஷூட்டிங் துவங்குமாம்.
