vikram vedha

அட இந்த ஆர்டிக்கில் ‘மாதவன்’ நடித்த விக்ரம் பற்றியதோ, ‘விஜய் சேதுபதி’ நடித்த வேதா பற்றியதோ சத்தியமா கிடையாதுங்க. இந்த “விக்ரம் வேதா” ஆர்டிக்கிலின் நாயகன் “விவேக் பிரசன்னா”.

Vivek Prasanna in Vikram Vedha Audio Launch

விக்ரம் வேதா

வய் நாட் ஸ்டுடியோஸ், சசிகாந்த் தயாரிப்பில், புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்களை கடந்து மாஸ் ஹிட் படம் விக்ரம் வேதா.{விக்ரம் வேதாவை பாராட்டிய சூப்பர் ஸ்டார்} ஜிஎஸ்டி பிரச்சனையால் தியேட்டர்கள் ஸதம்பித்து போய் இருந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்தது இப்படம். நம் ‘வேதாளம் சொல்லும் கதை’ பாணியில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ரீ-மேக் உரிமையை பெற, போட்டோ போட்டி நடக்கிறது நாம் அறிந்த விஷயமே.

காங்ஸ்டர் ரவி- விக்ரம் வேதா

Vikram Vedha

விக்ரம் வேதா படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் கேங்ஸ்டர் ரவி. இதனை விவேக் பிரசன்னா கனக்கச்சிதமாக செய்திருப்பார். இவர் குறும்படம், டெலி பில்ம்களில் நடித்தவர். மக்கள் செல்வனின் ‘சேதுபதி’ தான் இவரின் முதல் படம். இறைவி, பீச்சாங்கை போன்ற படங்களில், சில காட்சிகளில் மட்டும்  வந்து போன இவர் தான்  விக்ரம் வேதா படத்தில் முக்கிய வில்லன்.

மூன்று விதமான காலகட்டங்களில் இவர் வேதாவுடன் இருப்பது போன்று அமைந்திருக்கும் இவர் கதாப்பாத்திரம். முதலில் ஏதிரியாக, பின் நண்பன் போல, இறுதியில் துரோகியாக மனிதர் நடிப்பில் அசத்தி இருப்பார். எனினும் இந்த ரோலுக்கு முதல் சாய்ஸ் நடிகர் இவர் கிடையாதாம்.

John Vijay

ஜான் விஜய்- முதல் சாய்ஸ் நடிகர் இவர் தானாம்.

காமெடியனாக, வில்லனாக, குணசித்திர நடிகராக நாம் பார்த்திருக்கும் ஜான் விஜய் தான் “கேங்ஸ்டர் ரவி” ரோலுக்கு முதல் சாய்ஸ் நடிகராம்.

ஜான் விஜய் லயோலா கல்லூரியில் புஷ்கர்-காயத்ரியின் சீனியர். இவர்களின் முதல் படமான ‘ஓரம் போ’ படத்தில் ”சன் ஆப் கன்” கதாப்பாத்திரம் தான் அவருக்கு தமிழ் சினிமாவில் மாஸ் என்ட்ரி கொடுத்தது.

Oram Po: Sun Of Gun

இவர்களின் அடுத்த படமான ‘வா’ விலும் அவர் “பரட்டை ப்ரின்சாக” நடித்திருப்பார். இப்படத்தில் காங்ஸ்டர் ரோலில் நடிக்க ஒப்பந்தமும் 2016ல் கையெழுத்தானதாம். பின்னர் துல்கர் சல்மானின் சி ஐ ஏ (CIA : Comrade In America) படத்தில் பிஸி ஆன காரணத்தால் தான் இவரால் நடிக்க முடியாமல் போனதாம்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

ஒருவரின் நஷ்டமே மற்றறொருவரின் லாபம் என்பது போல் அமைந்து விட்டது விவேக் பிரசன்னாவிற்கு. விக்ரம் வேதா துவக்கப் புள்ளி என்றால், அன்பர் மேயாத மான் படத்தில் கோடு போட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.அந்தளவிற்கு இவரின் நடிப்பு மெருகேறி இருந்தது.

Maeyatha Maan

யாரும் இவர் மனதில் நடித்தால் ஹீரோ தான் என்று விதைக்காமல் இருந்தால் சரி. விவேக் பிரசன்னா போன்ற இளம் நடிகர் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்தால், அடுத்த பிரகாஷ் ராஜ் ஆகும் நாள் மிக அருகில் தான் உள்ளது. ஒரு கலக்கு கலக்குங்க ப்ரோ.