விஜய் சேதுபதி மற்றும் மாதவன் கூட்டணியில் வெளியான படம் விக்ரம் வேதா. இந்த படம்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

vikram vedha

இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, மாதவன் கதாநாயகனாக நடித்திருப்பார். படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருப்பார். கதிர் , வரலக்ஷ்மி சரத்குமார், பிரேம் என்று அனைவரது நடிப்பும் சிறப்பாக இருக்கும் .  படத்தை புஷ்கர் மற்றும் அவரது மனைவி காயத்ரி இயக்கியுள்ளார்கள். சசிகாந்த தயாரித்தார் .  படம் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி வெளியானது. தற்போது படத்தின் 100-வது நாள் வெற்றியை கொண்டாட மீண்டும் படக்குழு ஒன்றுக்கூடியது.

இதில் பேசிய விஜய் சேதுபதி ,எனக்கென்று வரலாறுன்னு ஒன்னு எழுதினா அதுல கண்டிப்பா விக்ரம் வேதா படம் இருக்கும் என கூறினார்.

மாதவன் பேசும் பொழுது வை நாட் ஸ்டுடியோஸ் நல்ல படங்களை தயாரிக்கின்றனர். pad அதின் ட்விஸ்ட் இது தான் என்று வெளியே சொல்லாத மீடியா நண்பர்களுக்கு என் நன்றி. நான் சொல்லிய சில விஷயங்களை படத்தில் சேர்த்தனர், சிலவற்றை நிராகரித்தனர் இந்த இயக்குனர் ஜோடி. எது தேவை, எது தேவையில்லை என்பது இவர்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.

இதோ அந்த போட்டோக்கள்.