புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள ‘விக்ரம் வேதா’ இந்த வாரம் 7ம் தேதி ரிலீசாவதாக இருந்தது. ஆனால் தமிழ் திரையுலகில் திடீர் என்று நடந்த தியேட்டர் ஸ்டிரைக்கால் ‘விக்ரம் வேதா’ படம் உட்பட சில படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ‘விக்ரம் வேதா’ படத்தை வருகிற 21ம் தேதி வெளியிட அப்படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். அதைப்போல ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘மீசைய முறுக்கு’ திரைப்படமும் இம்மாதம் 21ம் தேதி வெளியாகவிருப்பதாக அப்படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த படங்கள் தவிர ‘சாட்டை’ படத்தை இயக்கிய அன்பழன் இயக்கத்தில் கயல் சந்திரன் ஆனந்தி நடித்துள்ள ‘ரூபாய்’ திரைப்படத்தை வருகிற 14ம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அப்பட குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இப்படி அடுத்தடுத்து பல புதிய படங்களின் ரிலீஸ் தேதி அறிவித்தவண்ணம் இருக்கிறது.