Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் உடம்பை மாற்றும் விக்ரம்! அடுத்த படம் என்ன தெரியுமா?

பாலிவுட்டில் தயாராகிவரும் ‘மாஹாவீர் கர்ணன்’ படத்தில் கர்ணனாக நடிக்க இருக்கும் சியான் விக்ரம், அந்த படத்திற்காக தன் உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளார்.
‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி 2’ ஷூட்டிங் முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்போ பாலிவுட்டில் ரூ. 300 கோடி செலவில் எடுக்க உள்ள ‘மஹாவீர் கர்ணன்’ படத்தில், கர்ணனாக நடிக்க விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதலில் ப்ரித்வி ராஜ் நடிப்பார் என்று இருந்தது. ஆனால் அவருக்கு கால்ஷீட் பிரச்சனையால், கர்ணனாக விக்ரமை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சாமி 2 படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டதால், கர்ணன் படத்திற்காக, பீமா,ஐ படத்தை விட உடல் எடையை கூட்டி, பெரிய உடலுடன் ‘கர்ணன்’ ஆக நடிக்க விக்ரம் தயாராகி வருகின்றார். அதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை விக்ரம் தவிர்த்து கொணடே வருகின்றார்.
