fbpx
Connect with us

Cinemapettai

கோப்ரா படத்திற்காக 80 அடி ஆழத்தில் ரிஸ்க் எடுத்த விக்ரம்.. உயிர் போயிருக்கும் என அதிர்ச்சி அளித்த இயக்குனர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோப்ரா படத்திற்காக 80 அடி ஆழத்தில் ரிஸ்க் எடுத்த விக்ரம்.. உயிர் போயிருக்கும் என அதிர்ச்சி அளித்த இயக்குனர்

சமீபகாலமாக ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்க முடியாமல் தடுமாறி வரும் விக்ரம் எப்படியாவது கோப்ரா படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என களத்தில் இறங்கியுள்ளார்.

கோப்ரா படத்தை முருகதாஸின் அசிஸ்டெண்ட் டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த டிமான்ட்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களும் செம ஹிட். விக்ரம் வித்தியாசமான 7 கெட்டப்பில் நடித்து வரும் கோப்ரா படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

பத்து நாள் மட்டும் சூட்டிங் பாக்கி உள்ள நிலையில் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரபல யூடியூப் நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்து அஜய் ஞானமுத்து கோப்ரா ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் எடுத்த ரிஸ்க் பற்றி கூறியுள்ளார்.

நீருக்கு அடியில் எடுக்க வேண்டிய காட்சி என்றும், டூப் போட்டும் அந்த காட்சி எடுக்க முடியவில்லை என மிகவும் வருத்தத்தில் இருந்தாராம் அஜய் ஞானமுத்து. இதற்கிடையில் நானே செய்கிறேன் என 80 அடி ஆழத்தில் தலைகீழாக நீருக்குள் விக்ரம் வைத்து எடுக்கப்பட்ட காட்சி அது. அந்தக் காட்சியின் போது நீர், நரம்பு மண்டலத்தில் விக்ரமுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இருந்தும் அதை பொருட்படுத்தாமல் உடனடியாக அடுத்தடுத்த காட்சிகளை நடத்தி முடிக்க உதவி செய்தார். இன்னும் இரண்டு நிமிடங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் விக்ரம் சார் உயிரே போய் இருக்கும் என அவர் கூறியது விக்ரம் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
To Top