விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஸ்கெட்ச். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா நடிக்க, தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் மெர்சலுக்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் என்று முன்பு கூறப்பட்டது, இதுக்குறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் கூறுகையில் ‘கண்டிப்பாக ஸ்கெட்ச் தீபாவளிக்கு இல்லை.VIKRAM

இப்படத்தை நாங்கள் டிசம்பர் மாதம் வெளியிட தான் முடிவு செய்துள்ளோம், விரைவில் இசை வெளியீடு குறித்து தகவல் வரும்’ என்றும் தெரிவித்துள்ளார்.vikram

தற்போது வரை தீபாவளிக்கு மெர்சலுடன் கார்த்தி நடிக்கும் தீரன் படம் வருவதாக மட்டுமே அறிவித்துள்ளனர்.