Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்ரமால் நடுத்தெருவிற்கு வந்த 7 தயாரிப்பாளர்கள்.. பின்பு வாழ்க்கை கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பின் மூலம் ரசிகர்களை வைத்து இருப்பவர் நடிகர் விக்ரம். ஆனால் ஆரம்ப காலத்தில் இவருக்கு பெரிய பெரிய அளவில் எந்த படமும் ஓடவில்லை.

அவர் முதலில் நடித்த என் காதல் கண்மணி, தந்துவிட்டேன் என்னை, காவல் கீதம் போன்ற முதலில் வெளியான 7 படங்கள் எதுவுமே பெரிய அளவில் திரையரங்குகளில் ஓடவில்லை. மீரா படம் நல்ல படமாக இருந்தாலும் அந்த படமும் வெற்றியடையவில்லை.

அதனால் முதலில் 7 தோல்வி படங்களை கொடுத்த ஒரே நடிகர் விக்ரம். அதனாலேயே அப்போது அவரை அனைவரும் தோல்வியின் முகம் என அழைத்து வந்துள்ளனர். ஆனால் தோல்வி முகத்தை வைத்து வெற்றி கொடுத்தவர்தான் பாலா. 7  படங்களுக்கு பிறகு விக்ரமை வைத்து பாலா இயக்கிய சேது திரைப்படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் பிரபலமானார் விக்ரம்.

vikram-bala-cinemapettai

vikram-bala-cinemapettai

அப்போது பலரும் பாலாவிடம் விக்ரமை வைத்து படம் எடுக்க வேண்டாம் என கூறியுள்ளனர். ஆனால் பாலா ஒப்புக் கொள்ளவில்லையாம். அதற்கு காரணம் உதவி இயக்குனராக பணியாற்றிய போது அவர் உடனே அப்போது நெருக்கமானவர் தான் விக்ரம்.

அப்போது உன்னை வைத்து நான் படம் எடுப்பேன் என பாலா கூறிவிட்டாராம். அதனாலேயே விக்ரமை வைத்து சேது படத்தை இயக்கினார். சேது படத்திற்கு பிறகு விக்ரம் 2 வருடங்களுக்கு சினிமாவில் நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.

அப்போதும் கதை தேர்வுகளிலும் மற்ற விஷயங்களும் விக்ரமிற்கு பாலா உதவியாக இருந்துள்ளார். அதன் பிறகு காசி, ஜெமினி, தில் மற்றும் தூள் போன்ற படங்கள் வெற்றி அடைந்தன.

Continue Reading
To Top