Tamil Cinema News | சினிமா செய்திகள்
கேரளா நிவாரணத்திற்காக வர்மா படத்தின் மொத்த சம்பளத்தையும் தூக்கிக் கொடுத்த விக்ரம் மகன் துருவ்.!
விஜய் தேவாரகொண்டா நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் அர்ஜுன் ரெட்டி, இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

vikram son
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தார்கள், தமிழில் வர்மா என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளார்கள், படத்தில் நடிகராக விக்ரம் மகன் துருவ் நடித்துள்ளார்.
வர்மா படத்தை இயக்க விக்ரம் பாலாவிடம் கேட்டதால் பாலாவும் ஒப்புக்கொண்டு படத்தை இயக்கி முடித்துள்ளார், இந்த நிலையில் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, படத்தில் நடித்ததற்காக விக்ரம் மகன் துருவ் வாங்கிய சம்பளத்தை கேரளா வெள்ள நிவாரணத்திற்காக மொத்த சம்பளத்தையும் கொடுத்துள்ளார், இதை அறிந்த ரசிகர்கள் விக்ரம் மகனை பாராட்டி வருகிறார்கள்.
.#துருவ்விக்ரம் முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களிடம் அளித்தார். அவருடன் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இணை தயாரிப்பாளர் AV அனூப், அகில இந்திய விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூர்ய நாராயணன் உடன் இருந்தனர்
.#துருவ்விக்ரம் முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களிடம் அளித்தார். அவருடன் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இணை தயாரிப்பாளர் AV அனூப், அகில இந்திய விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூர்ய நாராயணன் உடன் இருந்தனர் pic.twitter.com/Jao8PL8vGG
— Thiyagu PRO (@PROThiyagu) September 24, 2018
