அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீ மேக்கில் நடிக்கப்போவது இவரா.

விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கு சினிமாவையே புரட்டிப்போட்ட படம் தான் அர்ஜுன் ரெட்டி. மருத்துவக் கல்லூரியில் சீனியர், ஜூனியர் இடையே நடக்கும் லவ் ஸ்டோரி. காதல், காமெடி, ரொமான்ஸ், பிரேக்-அப், என்று பல பரிமாணங்களை இந்தப்படத்தில் அழகாக சித்தரித்து இருந்தார் இயக்குனர் சந்தீப்.

இப்படத்தின் ரீ மேக் பற்றி பல நாட்களாகவே வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. அதில் சில, தனுஷின் நிறுவனம் இப்படத்தின் ரீ மேக் உரிமையை பெற்றுள்ளது, அர்ஜுன் ரெட்டியாக சிம்பு நடிப்பார், பின் விஜய் சேதுபதி நடிப்பார் என்று பல புரளிகள் கிளம்பியது.

இந்நிலையில் தற்போழுது அர்ஜுன் ரெட்டி ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிறது. என்ன என்று பார்த்தால் “இப்படத்தில் நடிக்கப்போவது நம்ப சீயான் விக்ரம் மகன் துருவ் என்றும், படத்தை இயக்கப்போவது விக்னேஷ் சிவன், தயாரிக்கப் போவது ஈ 4 என்டேர்டைன்மென்ட்” என்பதே ஆகும்.”

பலரும் இவ்விஷயத்தை ரி ட்வீட் செய்கிறார்கள். விக்ரமே இதை இன்று 6  மணியளவில் உறுதி செய்துவிட்டார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் .

@dhruv.vikram .. ready to make the leap. #DhruvtobeArjunReddy #E4Entertainment

A post shared by Vikram (@the_real_chiyaan) on

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்: இந்த செய்தி மட்டும் உண்மை என்றால், இதை விட நடிக்க ஸ்கோப் உள்ள அறிமுகம் கட்டாயம் கிடைக்காது தான்.

Comments

comments