டைரக்டர்களின் வாரிசு, ஹீரோக்களின் வாரிசு என யாராக இருந்தாலும் அவர்களின் முதல் டார்க்கெட் ஹீரேவாகா நடிப்பதாகத்தான் இருக்கும். அதேபோல், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கிருஷ்ணா விரைவில் ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் குட் நைட் சார்லி -என்ற பெயரில் ஒரு குறும் படம் இயக்கியுள்ளார்.

ஆங்கிலத்தில் உருவாகியுள்ள அந்த குறும்படம் ஒரு சிறுவனை மையப்படுத்தி உருவாகியுள்ளது. மொத்தம் 15 நிமிடங்கள் ஓடும் அப்படம் நேற்று யு-டியூப்பில் வெளியாகியுள்ளது. அதை நடிகர் விக்ரமே தயாரித்துள்ளார். மேலும், லண்டனில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்து வரும் துருவ் கிருஷ்ணா, பிலிம் இன்ஸ்டிடியூட்டிற்காக இந்த குறும் படத்தை இயக்கியிருக்கிறாராம். இன்ஸ்டிடியூட் படிப்பை முடித்ததும், விரைவில் அப்பா விக்ரமை நாயகனாக வைத்து ஒரு படத்தை தமிழில் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.