Tamil Cinema News | சினிமா செய்திகள்
சின்ன சீயானின் ஃபேவரைட் ஹீரோ யார் தெரியுமா? ரசிகர்கள் செம குஷி
சின்ன சியான் என்பது வேறு யாருமல்ல. நம்மளுடைய சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தான். இவர் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் தான் ஒரு தளபதி ரசிகன் என்று கூறியுள்ளார். இதனால் தளபதி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
பிரபல ஹாலிவுட் ஹீரோவான நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவரும் தற்போது சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாக உள்ளார். துருவ் விக்ரம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு “ஆதித்ய வர்மா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தினை நவம்பர் 9ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் புரொமோஷன்ல் ஈடுபட்டுள்ள துருவ் விக்ரம், தற்போது பல கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் கிண்டியில் உள்ள பிரபலமான பொறியியல் கல்லூரியில் சமயத்தில் கலந்து கொண்ட இவரிடம், நீங்கள் தல ரசிகரா? தளபதி ரசிகரா? என்ற கேள்வியை மாணவர்கள் எழுப்பினர்.
“உண்மையை சொல்லனும்னா நான் தளபதி ரசிகன்” என்று கூறினார். இதனை கேட்ட தளபதி ரசிகர்கள் கூச்சலிட்டு, ஆரவாரம் செய்தனர். சில நிமிடத்தில் அரங்கமே கலை கட்டியது. தளபதி விஜயும், சீயான் விக்ரமும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
