‘குற்ற பரம்பரை’ கதையை படமாக எடுப்பதில் பாலா-பாரதிராஜா இருவரும் நேரடியாக மோதிக் கொண்டனர். இதில் பாரதிராஜா தனது உதவி இயக்குநர்களுடன் இப்படத்திற்கு பூஜை போட்டு விரைவில் படப்பிடிப்பை தொடங்கப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் ‘குற்ற பரம்பரை’யை தள்ளிவைத்து ஒரு காதல் கதையை பாரதிராஜா இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் விக்ரம் மகன் துருவ், இயக்குநர் வசந்த் மகன் இருவரையும் ஒருசேர அறிமுகப்படுத்த பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக விக்ரம் மற்றும் வசந்த் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படம் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் 2 வது பாகமா? என்று விசாரித்தால் இல்லை இது புத்தம்புதிய ஒரு காதல் கதை என்று கூறுகின்றனர்.

விக்ரம் பாரதிராஜா இயக்கத்தில் தனது மகனை அறிமுகப்படுத்துவாரா? இல்லையா? என்பது இன்னும் ஒருசில மாதங்களில் தெரிந்து விடும்.