இருமுகன்’ படத்திற்கு பிறகு ‘சியான்’ விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ மற்றும் ஹரியின் ‘சாமி 2’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது.

இதில் ‘ஸ்கெட்ச்’ படத்தில் ‘சியான்’ விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், ஆர்.கே.சுரேஷ், ‘கங்காரு’ புகழ் ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, ரவி கிஷன், பாபுராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம்.

Sketch

சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு தமன் இசையமைக்கிறார், ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை ‘மூவிங் ஃப்ரேம்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.

எஸ்.தாணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வி கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

sketch movie

சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஸ்டைலிஷ் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர் மற்றும் விக்ரம் பாடிய ‘கனவே கனவே’ சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டுள்ளனர். பக்கா மாஸான இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here