Tamil Cinema News | சினிமா செய்திகள்
கூட்டத்தில் திடீர் செல்பி.. பெருந்தன்மையாக நடந்துகொண்ட விக்ரம்

ரசிகர்களுடன் விக்ரம் போட்டோ
சில மாதங்களுக்கு முன்பு சிவகுமார் செல்பி எடுக்க சென்ற ஒரு ரசிகர் போனை தட்டிவிட்டு பரபரப்புக்குள்ளானது. இந்த செல்போன் உடைந்தது அதற்கு பதிலும் சிவகுமார் வேறு செல்போனை வாங்கிக் கொடுத்தார்.
இப்பொழுது அதே பிரச்சினை விக்ரமுக்கு வந்தது ஆனால் விக்ரம் கையாண்ட விதம் பாராட்டக்குரியது. ஒரு உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைப்பதற்காக விக்ரம் சென்றார். அப்பொழுது கூடிய கூட்டம் அதிகமாகவே சென்றது.
உடற்பயிற்சி கூடத்துக்கு உள்ளே சென்ற விக்ரம் சிறிது நேரத்தில் ஒரு ரசிகர் செல்பி எடுக்க விக்ரம் முகத்துக்கு நேராக போனை நீட்டினார், திடீரென செல்பி எடுத்ததனால் எதிர்பார்க்காத விக்ரம் இப்ப வேண்டாம் அப்புறம் எடுக்கலாம் என ஒதுங்கிவிட்டார். அதேநேரம் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் ரசிகர்களுடன் போட்டோ எடுத்து சென்றார்.
அந்த வீடியோ இப்பொழுது வைரலாக சென்று கொண்டிருக்கிறது. பொதுவாக விக்ரம் அனைத்து ரசிகர்களிடமும் செல்பி எடுத்து மதித்து பேசுவார். அதேபோல் இந்த முறையும் விக்ரம் பெருந்தன்மையாக நடந்துகொண்டார்.
