fbpx
Connect with us

விக்ரமின் சாமி-2 படத்தின் டைட்டில் மாற்றம்.!!! புதிய டைட்டில் இதுதான்…!!

saamy

News | செய்திகள்

விக்ரமின் சாமி-2 படத்தின் டைட்டில் மாற்றம்.!!! புதிய டைட்டில் இதுதான்…!!

2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் சாமி.நான் போலீஸ் இல்லடா…பொறுக்கி’’ என காக்கிச் சட்டையில் நடிகர் விக்ரம் கெத்து காட்டி நடித்த சாமி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

அந்த சமயத்தில் அடுத்தபடியாக ரஜினி படத்தை ஹரி இயக்குவார் என்றெல்லாம் பேசப்பட்டது. அந்த அளவுக்கு மாஸ் ஹிட்டாக அந்தபடம் அமைந்தது. அதையடுத்து தொடர்ந்து அதிரடி ஆக்சன் படங்களாக இயக்கி வந்த டைரக்டர் ஹரி, தற்போது 14 ஆண்டுகளுக்குப்பிறகு சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

சாமி முதல் பாகத்தில் விக்ரம் பொருக்கி போலீஸ் நடிப்பில் ரசிகர் மனதை பறித்தார் சாமி முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் ஹிட் ஆனது அதும் இல்லாமல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.saamy

‘துருவ நட்சத்திரம்’ , ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘சாமி 2’வில் கவனம் செலுத்தவிருக்கிறார் விக்ரம். இந்தப் படத்துக்கான முதற்கட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது படக்குழு

இப்படத்தில் விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராகவும், ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும், மிலன் கலை இயக்குநராகவும், கனல் கண்ணன் சண்டை வடிவமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த படத்திலும் விக்ரம் ஆறுச்சாமியாகவே நடிக்கிறார். முந்தைய கதையின் தொடர்ச்சியாகவே சாமி-2 படக்கதையும் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தில் நாயகியாக நடித்த திரிஷாவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக இப்போது கீர்த்தி சுரேசும் நடிக்க, கோட்டா சீனிவாசராவ் நடித்த வில்லன் வேடத்தில் அவரது மகனாக பாபி சிம்ஹா தொடர்கிறாராம்.

தமிழ் படங்களில் வில்லனாக அறிமுகமான பாபி சிம்ஹா சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால், ஹிரோயிசம் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் வில்லன் கேரக்ட்டர் கை கொடுக்கும் என எதிர் பார்க்கிறார்.

எனவே மீண்டும் வில்லத்தனமான கதாபத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் கருப்பன் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் பாபி சிம்ஹாவின் வில்லன் கதாபாத்திரம் அதிகம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த சாமி-2 படத்திலும் பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க இருக்கிறார்.

மேலும், நேற்று இந்த சாமி-2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், சாமி-2 என்ற தலைப்பை “சாமி ஸ்கொயர்” என்று மாற்றி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

சாமியின் தாக்கமோ என்னவோ சாமி-2 ரசிகர்கள் மத்தியில் இப்போதே பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top