Tamil Cinema News | சினிமா செய்திகள்
திரும்பிய இடமெல்லாம் அடி.! இனி விக்ரம் நிலமைதான் என்ன .?
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் சாமி 2, இந்த திரைப்படம் விமர்சனரீதியாக நெகட்டிவ் கருத்துக்களை பெற்று வந்தது ஆனால் படத்திற்கு ஒரு சில மக்களின் ஆதரவு கிடைத்தாலும் வசூல்ரீதியாக கொஞ்சம் பாதிப்பை அடைந்தது.

Saamy-2-first day collection
ஆனால் விக்ரம் படத்திலேயே செகண்ட் பெஸ்ட் ஓபனிங் திரைப்படம் சாமி 2 தான், படம் வெளியாகிய முதல் வாரம் நல்ல வசூலை பெற்றாலும் அது அடுத்த வாரங்களில் இருந்து, செக்கச் சிவந்த வானம், ராட்சசன், ஆகிய திரைப்படங்கள் வெளியானதால் சாமி 2 படம் வசூலில் பாதிக்கப்பட்டது.
செக்கச் சிவந்த வானம் ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் இன்னும் சில வாரங்கள் கழித்து வந்திருந்தால் சாமி 2 திரைப்படத்திற்கு முதலுக்கு மோசம் வந்திருக்காது, ஒரு பெரிய ஹீரோ படம் வெளியாகி இருக்கும் போது அடுத்த அடுத்த பெரிய படங்கள் வெளியாவதால் தமிழ் சினிமாவில் இதுபோல் பாதிப்பு தொடர்ந்து வருகிறது.
விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்த்த சாமி 2 படத்தின் ரிசல்ட் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது, விக்ரமின் அடுத்த படம் துருவ நட்சத்திரத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
