Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்ரம் பிரபு நடிப்பில் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ பர்ஸ்ட் லுக் இதோ- கத்தி போஸ்டர் மாதிரியே இருக்கே

சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் எப்போதுமே அதிகமாகவே இருக்கும். வாரிசுகளின் அடிப்படையில் முதல் பட வாய்ப்புகளை ஈஸியாக பெற்று விடுவார்கள். ஆனால் அதன் பிறகு தன்னுடைய கேரியரை தக்க வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது திறமை.

விக்ரம் பிரபு கும்கி வாயிலாக அறிமுகமானார். சரசரவென அடுத்தடுத்து படங்கள், படமும் டீசண்ட் வசூல் என்று மனிதர் தன் கால் ஷீட்டில் எப்பொழுதுமே பிஸி தான்.

vikram-prabhu-cinemapettai

vikram-prabhu-cinemapettai

‘துப்பாக்கி முனை’, ‘அசுரகுரு’ என டீசெண்டான இரண்டு படங்களை கொடுத்துள்ளார். இவர் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முத்தயையா இயக்கத்தில் படம் நடிப்பது நாம் அறிந்த விஷயமே. இந்நிலையில் இவர் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகி உள்ளது.

vikram prabhus next

மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிககின்றனர். ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தை கார்த்திக் செளத்ரி இயக்குகிறார். நாயகியாக வாணி போஜன், வில்லனாக தனஞ்ஜெயா நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக ஸ்ரீதர், இசையமைப்பாளராக மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர், எடிட்டராக வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். நவம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது.

இந்த போஸ்டர் சற்றே வித்யாசமாக இருப்பினும் தளபதி விஜயின் கத்தி போஸ்டர் சாயலில் தான் உள்ளது.

katthi

அட போங்கப்பா எதுக்கெடுத்தாலும் காப்பி அடிக்கப்பட்டதுன்னு சொல்லிக்கிட்டு என உங்க mind voice கேட்குது. பிரீயா விடுங்க மக்களே ..

Continue Reading
To Top