Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் பிரபுவிற்கு யானை என்றால் நம் விக்ராந்துக்கு ஒட்டகம் ! புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
Published on
விக்ராந்த் செலிபிரிட்டி கிரிக்கெட் மட்டும் ஆடுபவர் என்ற மாயையை உடைத்து நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள போராடி வருபவர். ஏற்கனவே “சுட்டுப்பிடிக்க உத்தரவு” படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இவரது அடுத்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
‘பக்ரீத்’
ஜெகதீசன் சுபு என்பவர் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். M10 ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார். இசை டி இமான். எடிட்டிங் ரூபென். விக்ராந்துக்கு மனைவியாக வசுந்தரா நடித்து வருகிறார்.

Bakrid vikranth
இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் சமூகவலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Bakrid vikranth
