விக்ரம் பிரபு கும்கி படம் வாயிலாக அறிமுகமானவர். தொடர்ந்து கமேற்சியால் படமாக நடித்து கலக்கியவர். வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று படங்களாவது வெளியானது. சில காலமாகவே இவரின் படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.

PAKKA

நிக்கி கல்ராணி, பிந்து மாதவியுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘பக்கா’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. மேலும் காக்க காக்க பட ஸ்டைலில் உருவாகும் தினேஷ் செல்வராஜின் ‘துப்பாக்கி முனை’ நடித்து வருகின்றார்.

அதிகம் படித்தவை:  நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி வெளியானது!
Thupakki Munai

இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க விக்ரம் பிரபு கமிட்டாகியுள்ளார். ‘அசுரகுரு’ என்பது டைட்டில். இது த்ரில்லர் ஜானரில் உருவாகும் படமாம் . “அஞ்சனவித்தை” என்ற குறும்படத்தை இயக்கி தமிழக அரசின் விருது பெற்ற அ.ராஜ்தீப் இந்த படத்தை இயக்குகிறார். இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இவர்.

அதிகம் படித்தவை:  எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்....
vikram prabhu

இந்த படத்தில் யோகி பாபு, ஜெகன், ராம்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடக்கிறதாம். வெகு விரைவில் இதில் நடிக்கவுள்ள ஹீரோயின், இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.