நெருப்புடா படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் பக்கா படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் நிக்கி கல்ராணி மற்றும் பிந்து மாதவி இவருக்கு ஜோடி. இதனை தொடர்ந்து தினேஷ் செல்வராஜின்‘துப்பாக்கி முனை’ படத்தில் நடித்து வருகிறார். போலீசாக அவர் நடிக்கும் இப்படத்தில் ஹன்சிகா தான் ஹீரோயின்.

இந்நிலையில் விக்ரம் பிரபு இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் ராஜ் தீப் என்பவருடன் ஒரு படம் பண்ண உள்ளார் என்ற செய்திகள் வெளியாகின. இப்படத்திற்கு அசுரகுரு என தலைப்பு வைத்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  ராஜமௌளியே அசந்து போன பாகுபலி வசூல்
ASURAGURU

இந்த படத்தில் யோகி பாபு, ஜெகன், ராம்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். கதாநாயகி யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை.

அதிகம் படித்தவை:  சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
asura guru pooja

‘JSB ஃபிலிம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசை. ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்நிலையில் இன்று காலை படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது.

ASURAGURU MOVIE POOJA

இயக்குநர் மோகன் ராஜா கிளாப் போர்டு அடித்து படத்தின் முதல் ஷாட் படமாக்கப்பட்டதாம்.