லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக  2012ல் அறிமுகமான படம் கும்கி. வித்யாசமான கதைக்களம், இமானின் இசை, லட்சுமி மேனனின் மெர்சல் நடிப்பு, தம்பி ராமையாவின் காமெடி என்று பல சிறப்பு அம்சங்கள் உடைய சூப்பர் ஹிட் படம்.

தரமணி படத்தில் நாயகனாக நடித்து, அனைவரின் பாராட்டையும் பெற்றவர் வசந்த் ரவி. அவர் தற்பொழுது அளித்த பேட்டியில் கூறியது என்னவென்றால் “கும்கி படத்தில் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்க பட்டது நான் தான், மேலும் அப்படத்திற்க்காக போட்டோ ஷூட்டும் எடுக்கப்பட்டது;  சில தவிர்க்க முடியாத காரணத்தால் படம் கை நழுவிப் போனது. கண்டிப்பாக பிரபு சாலமனுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணுவேன்.”

அதிகம் படித்தவை:  பாவனா கல்யாணத்தை நிறுத்தவே அந்த கடத்தல்..! சிக்கிய பெரும்புள்ளி

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:  கயல், தொடரி போன்ற படங்கள் ஹிட் ஆகாததால், பெரிதும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தாய்லாந்தில் கும்கி 2 ஆரம்பித்து விட்டார் இயக்குனர். முதல் பாகத்தில் நடித்த யாருமே இடம் பெறப்போவதில்லை.  புதுமுகங்களை வைத்து படம் எடுக்கப்போகிறார் பிரபு சாலமன் .