Sports | விளையாட்டு
நண்பா சிறப்பான ஆட்டம். விஜய் ஷங்கரை பாராட்டி ஸ்டேட்டஸ் பதிவிட்ட கோலிவுட் ஹீரோ யார் தெரியுமா ?
இன்றைய போட்டியில் பேட்டிங் , பௌலிங் என இரண்டிலும் அசத்தி விஜய் ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

விஜய் ஷங்கர் VIJAY SHANKAR
மிதவேக பந்துவீச்சாளர் மற்றும் மத்திய வரிசை பாட்ஸ்மான். இன்றைய ஆஸ்திரேலியாவுடனான நாக்பூர் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட் இழந்து தடுமாறிய சமயத்தில் அதிரடியாக கேப்டன் கோலியுடன் இணைந்து ஆடினார். 41 பந்தில் 44 ரன்கள் ( ஐந்து தரும் ஒரு 6 அடக்கம்) எடுத்தார். துரதிர்ஷ்ட விதமாக ரன் அவுட் ஆனார்.

vijay shankar
பின்னர் பந்துவீச்சில் ஒரு ஓவர் வீசி 13 ரன் கொடுத்தார். இந்நிலையில் 50 வைத்து ஓவர் போடும் வாய்ப்பு இவருக்கு அளிக்கப்பட்டது. 6 பந்து 11 ரன் 2 விக்கட் மீதம் இருந்தது. ஜாதவ் அல்லது ஷங்கர் யார் வீசுவார்கள் என்ற குழப்பம் அனைவருக்கும் இறந்தது. எனினும் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு செல்ல முதல் பாலில் செட் பேட்ஸ்மேன் ஸ்டானிஸ் 52(65) அவர்களை lbw முறையில் அவுட் ஆக்கினார். அதன் பின்னர் அடுத்த பாலில் இரண்டு ரன் கொடுத்தார். பின்னர் ம்மொன்றுவது பாலில் போல்ட் செய்து ஆடம் சம்ப்பா விக்கட்டை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெற செய்தார்.
விக்ரம் பிரபு

vikramprabhu
இந்நிலையில் தன் ட்விட்டரில் விக்ரம் பிரபு நண்பா சிறப்பான ஆல் ரவுண்டு ஆட்டம் ஆடினாய் என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
Vijay Shankar! Nanba! ? great game all round @vijayshankar260 ????
— Vikram Prabhu (@iamVikramPrabhu) March 5, 2019
