Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரமின் கோப்ரா படம் குறித்து சூப்பர் அப்டேட்! ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா?
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது.
அதற்காகவே மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் வண்ணம் கோப்ரா என ஒரே தலைப்பை படக்குழு வைத்திருக்கிறது.
கடினமான உழைப்பாளியான விக்ரமுக்கு அண்மை காலத்தில் எந்த படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. அதேநேரம் அவரது படங்கள் ஒவ்வொன்ருமே அவரை தனித்துவமாக நிலைநிறுத்துகின்றன. வசூல் நிலவரம் தான் கவலை அளிக்கிறது.
எனவே இந்த கோப்ரா திரைப்படம் அதை மாற்றும் என நம்பலாம். விக்ரம் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் 50 சதவீதம் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற உள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் வரும் 2020ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியுரசு தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது. தற்போது படக்குழு மோசன் போஸ்டர் மட்டும் வெளியிட்டுள்ளது.
