Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் விக்ரம்.! என்ன திரைப்படம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் விக்ரம் படத்திற்கு தனி வரவேற்பு இருக்கிறது ரசிகர்களிடம் இவர் தனது படத்தில் வித்தியாசமான முயற்சிகளை எப்பொழுதும் செய்வார் இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாமி 2, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார்கள்.
இந்த நிலையில் விக்ரம் அடுத்து துருவ நட்சத்திரம் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது, அது மட்டுமில்லாமல் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு பிரமாண்ட படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் இந்த படத்தை ராஜேஷ் செல்வா இயக்க கமல் மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் மெகா ஹிட்டான டோன்ட் ப்ரீத் என்ற படத்தின் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்த கமல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
