Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் நடிக்கும் அடுத்த வரலாற்று படம்.. மலைக்க வைக்கும் பட்ஜெட்
விக்ரம் நடிக்கும் அடுத்த வரலாற்று படம்
வரலாற்று சிறப்புமிக்க படங்களில் நடிப்பதற்கு என்று ஒரு தனி திறமை வேண்டும். ஏனென்றால் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதால் இதன் எதிர்பார்ப்பும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சியான் விக்ரம் திரை உலகத்தின் தலை சிறந்த நடிகர் என்று கூறலாம். அதிலும் இவர் வரலாற்று படங்களில் நடித்தால் உண்மையாகவே அந்த கேரக்டராகவே வாழ்ந்து விடுவார்.

cheeyan vikram kadaram kondan
தற்போது கமல் தயாரிப்பில் கடாரம் கொண்டான் என்ற படத்தில் இப்போது விக்ரம் நடித்து வருகிறார். வரலாற்று சிறப்புமிக்க கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகின்ற படமாகும். இதற்குப்பின் விக்ரம் அவர்கள் நடிக்கும் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க படம் மகாவீர் கர்ணா. மகாபாரதத்தில் வரும் கர்ணன் இன் வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கிறார் விக்ரம்.
இந்தப் பட பூஜை திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் வைத்து நடைபெற்றது. 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப் போவதாகவும், தமிழ் இந்தி மற்றும் மலையாளம் மூன்று மொழிகளில் இப்படம் எடுக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தின் துரியோதனனாக சுரேஷ்கோபி நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ராஜராஜசோழனின் வரலாற்று சிறப்புமிக்க படத்தை முடித்துவிட்டு மகாபாரதத்தில் கர்ணனின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் விக்ரமுக்கு சினிமாபேட்டையின் வாழ்த்துக்கள்.
