ஆனந்த் சங்கர் இயக்கிய இருமுகன்’ படத்திற்காக தனது அதிகபட்சை உழைப்பை கொட்டியுள்ள விக்ரம், தற்போது வெற்றி என்னும் அறுவடையை செய்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்களிடம் மட்டுமே பணிபுரிந்து வந்த விக்ரம், முதல்முறையாக ‘பிரம்மன்’ என்ற சுமாரான படத்தை இயக்கிய சாக்ரடீஸ் என்ற இயக்குனருக்கு அடுத்த படத்திற்கான கால்ஷீட்டை கொடுத்துள்ளார்.

சசிகுமார், சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிரம்மன்’ படம் சுமாராக போனபோதிலும், அவர் விக்ரமுகாக கூறிய கதையின் மீது நம்பிக்கை வைத்து விக்ரம் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் விக்ரம் நடிக்கவிருந்த ‘கரிகாலன்’ படம் திடீரென டிராப் ஆனதால் அதே தயாரிப்பாளர் இந்த படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். டிராப் ஆன தயாரிப்பாளர், தோல்வி அடைந்த இயக்குனர் என விக்ரம் அதிகபட்ச ரிஸ்க் எடுப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.