நல்லதோ, கெட்டதோ…. பெரிய ஹீரோக்கள் பண்ணுகிற எல்லாவற்றையும் தானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதுதான் ஹீரோக்களின் கெட்ட மனசு. அதே அந்த ஹீரோ ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே வந்திடுறாருப்பா… அந்த ஹீரோ படம் ஓடலேன்னா வாங்கிய சம்பளத்திலேர்ந்து இருபது பர்சென்ட் திருப்பி கொடுத்துறாருப்பா… என்று சொல்லிப் பாருங்களேன், காதிலேயே வாங்க மாட்டார்கள்.

இன்னொரு ஹீரோ வைத்திருக்கும் கார், இன்னொரு ஹீரோ கேட்கும் சம்பளம், அவ்வளவு ஏன்? இன்னொரு ஹீரோ ‘வைத்திருக்கும்’ நடிகை மீது கூட பொறமைப்பட்டு திரிவார்கள். அதுபோல வேண்டும் என்று நினைப்பார்கள். சரி… மேட்டருக்கு நேரடியாக வந்துவிடுவோம்.

அஜீத், விஜய் படங்களுக்கெல்லாம் உடனே தலைப்பு வைக்கப்படுவதில்லை. அப்படி வைக்கப்படுகிற வரைக்கும் அந்த படத்தை எப்படி அழைப்பது? அஜீத் 57, விஜய் 61 இப்படிதான். இந்த ஆசைதான் இப்போது விக்ரமை பிடித்து ஆட்டி வருகிறது. துருவ நட்சத்திரம் படத்திற்கு பின் இவர் நடிக்கும் புதிய படம் ‘——————–’ (இன்னும் தலைப்பு வைக்கலயாம்) என் படத்தையும் ரசிகனுங்க விக்ரம் 53 ன்னு சொல்லட்டும். அதுவரைக்கும் தலைப்பு வைக்காதீங்க. எல்லார்கிட்டயும் இந்த படத்தின் தலைப்பு விக்ரம் 53 ன்னே சொல்லுங்க என்று கூறிவிட்டாராம் விக்ரம்.

அஜீத் விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம் அதுனால அது நியாயம். உங்களுக்கு எதுக்கு விக்ரம்?