விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இத்தனை கோடி சம்பளமா.? அடம்பிடிக்கும் லோகேஷ், அதிர்ச்சியான கமல்!

பிட்சா சூது கவ்வும் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களின் கதநாயகனாக நடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் சூப்பர் ஸ்டாருடன் பேட்ட , தளபதி விஜயுடன் மாஸ்டர், மாதவனுடன் விக்ரம் வேதா, சசிக்குமாருடன் சுந்தரபாண்டியன் ஆகிய படங்களுக்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.

வருடத்திற்கு 3 முதல் ஆறு படங்கள் வரை வெளியிடும் மக்கள் செல்வனுக்கு மக்களிடத்தில் எப்போதும் நல்ல செல்வாக்கு. இப்படியாக வில்லன் ரோலுக்கு உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரிக்கும் “விக்ரம்” படத்திற்காக தயாரிப்பு குழுவிடமிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.

கேட்ட சம்பளம் தயாரிப்பு குழு நினைத்திருந்ததை விட இரட்டிப்பாம் இதைக்கேட்டறிந்த தயாரிப்பு குழு கமலிடம் விடயத்தை சொல்ல. கமலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டுள்ளார்.

ஆனால் லோகேஷ் மக்கள் செல்வன் தான் வேண்டும் என அடம்பிடிப்பதாய் தகவல். ஏங்க பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா என்பது போல் இப்போது உலகநாயகன்.

விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்திற்காக கிட்டத்தட்ட 15 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளாராம். இதனால் ராஜ்கமல் பிலிம்ஸ் விழி பிதுங்கி உள்ளதாம்.

மாஸ்டர் படத்தில் தளபதியை விட விஜய் சேதுபதிக்கு அதிகமான மாஸ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கூட தனது சம்பளத்தைக் குறைக்காமல் விடாப்பிடியாக இருக்கிறார் விஜய் சேதுபதி.

vikram-movie-cinemapettai
vikram-movie-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்