fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

உலகம் சுற்றி பல கோடிக்கு விளம்பரப்படுத்திய விக்ரம் எப்படி இருக்கு? தீயாய் பரவும் ட்விட்டர் விமர்சனம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உலகம் சுற்றி பல கோடிக்கு விளம்பரப்படுத்திய விக்ரம் எப்படி இருக்கு? தீயாய் பரவும் ட்விட்டர் விமர்சனம்

கிட்டத்தட்ட நான்கு வருட தவமாக காத்திருந்த கமல் ரசிகர்கள் தற்போது விக்ரம் திரைப்படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவை தெறிக்கவிட்ட ரசிகர்கள் தற்போது இந்த படத்தை ஆவலுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். காலை 4 மணிக்கு முதல் காட்சியை காண தியேட்டர் முன்பு திரண்டு இருந்த ரசிகர்கள் தற்போது படத்தை பார்த்து மிகுந்த உற்சாகத்துடன் கமெண்ட்டுகளை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

அதில் கமல் மற்றும் விஜய் சேதுபதியின் என்ட்ரி காட்சிகள் அசத்தலாகவும், வேற லெவலில் இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். முழுக்க, முழுக்க ஆக்ஷன் படமாக வெளிவந்த இந்த படம் கமல் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் ஃபுல் ட்ரீட்டாக இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் அனல் பறக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அதிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் தன்னுடைய ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த படத்தை கொடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

அனிருத்தின் பின்னணி இசை, விஜய் சேதுபதியின் வில்லத்தனம் என்று விக்ரம் ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்துள்ளதாக கூறும் ரசிகர்கள் படம் பிளாக்பஸ்டர் ஹிட் என்று பாராட்டியுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் புகழ்ந்த நிலையில் தற்போது ரசிகர்கள் சொல்ல முடியாத சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பதாக ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இதில் சிறப்பு காட்சியில் சூர்யா நடித்து இருப்பதால் அவரின் ரசிகர்களும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆக மொத்தம் விக்ரம் திரைப்படம் தற்போது பல பாசிட்டிவ் கமெண்டுகளை பெற்று மாஸ் காட்டி வருகிறது.

Continue Reading
To Top