fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரஜினி செய்யாததை செய்து சாதித்துக் காட்டிய கமல்.. விக்ரம் படத்தை கொண்டாட இவ்வளவு காரணங்கள் இருக்கா!

lokesh-kamal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி செய்யாததை செய்து சாதித்துக் காட்டிய கமல்.. விக்ரம் படத்தை கொண்டாட இவ்வளவு காரணங்கள் இருக்கா!

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! 2022 ஆம் வருடம் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய திரைப்படம் என்றாலது விக்ரம். ஒரு வார முடிவில் 200 கோடிகளுக்கும் மேல் வசூலை குவித்து மேலும் முன்னேறி வருகிறது. கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த திரைப்படமாக இடம் பெறவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த திரைப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் கமல் தைரியமாக எடுத்த சில முடிவுகள். இந்த முடிவுகளை சரியாக எடுக்காத காரணத்தாலோ என்னவோ தெரியவில்லை ரஜினிகாந்த் அவர்களே அண்ணாத்த திரைப்படமோ அல்லது முந்தையை படமும் சரியாக போகவில்லை. வாருங்கள் அந்த சில காரணங்களை ஆராய்ந்து பார்க்கலாம்.

இளம் நடிகர்களுடன் கூட்டணி: விக்ரம் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோருடன் கமல்ஹாசன் சமமாக நடித்திருந்தார். எந்த இடத்திலும் கமல்ஹாசன் அவர்களுக்காக மற்ற இருவரது கதாபாத்திரம் சிறுமை படுத்தப்படவில்லை. அதே நேரம் பேட்ட திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாமல் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

லோகேஷ் மீது வைத்த அதீத நம்பிக்கை: மூன்று படங்கள் மட்டுமே இயக்கியிருக்கும் லோகேஷ் அவர்களின் திரைக்கதையும், இயக்கும் தன்மையும் கமல் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால் இந்த திரைப்படத்தில் கமல் எந்தவகையிலும் நடிப்பை தவிர்த்து பங்களிக்க வில்லை என்பதே நாம் அறியும் உண்மை. இந்தத் திரைப்படம் முதலில் இருந்து லோகேஷ் கனகராஜன் படமாக இருந்தது.

மற்ற படங்களின் ரெபரன்ஸ்: பழைய விக்ரம் திரைப்படம், கைதி போன்ற படங்களிலிருந்து கதாபாத்திரங்களை, அதன் தன்மைகளை இந்தப் படத்தில் நுழைத்தது. மார்வல் திரைப்படங்கள் வந்த பிறகு பல கதாபாத்திரங்கள் ஒரு திரைப்படத்திலிருந்து மற்ற திரைப்படத்தில் தோன்றுவது மிக இயல்பாகி விட்ட இந்த காலத்தில் தமிழில் அதுபோன்ற ஒரு படம் வருவது 90ஸ் கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ்களுக்கு அலாதி விருப்பம் ஆகிப்போனது

அசத்தலான புரோமோஷன்: இந்தத் திரைப்படத்திற்காக தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் தனி ஒருவராக பறந்து பறந்து புரமோஷன் செய்தார். படம் ரிலீஸாக மற்ற மாநிலங்கள் அனைத்திற்கும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பிரமோஷன் கொடுத்தார். அதனால் வந்த திரைப்படங்கள் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட எதிர்பார்ப்பை தூண்டியது என்பது நிதர்சனமான உண்மை

சூர்யாவின் கேமியோ: நடிகர் சூர்யா கமல்ஹாசன் அவர்களின் மிகப்பெரும் விசிறி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகை கமலுக்காக அவர்கள் சம்பளமே வாங்காமல் இந்தப்படத்தில் சிறிய கேமியோ ரோலில் ஒன்றை செய்துள்ளார். ரோலக்ஸ் என்ற அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அடுத்த படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் விரிவாக சொல்லப்படும் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருப்பது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை இப்போதே எகிற செய்துள்ளது

சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவுக்கு கிரீஷ் கங்காதரன், இசைக்கு அனிருத், சண்டைக் காட்சிகளுக்கு அன்பறிவ் என்று அந்த துறையில் முன்னணியில் இருப்பவர்களை கூட்டணியில் கொண்டது. இவர்கள் யாவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்துள்ளனர். மேக்கிங்கில் இந்த படம் நிச்சயம் சிறந்த படம் எனலாம்.

முந்தைய படங்களின் தடுமாற்றம்: அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் என்று மாஸ் நடிகர்கள் நடித்த படங்கள் சரியாக போகாத காரணத்தால் சுமாரான ஒரு படத்தைக் கொடுத்தால் அந்த படம் ஹிட்டாகி விடும் என்ற நிலை இருந்தது. ஆனபோதும் லோகேஷ் கனகராஜ் தரமான திரைக்கதை அமைத்து வெளியிட்ட காரணத்தால் இந்த படம் இன்று மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது.

ஃபேன்பாய் மோமெண்ட்: லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் அவர்களின் மிக பெரும் ரசிகர். சிறுவயது முதல் அவரது தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை அவர் பல இடங்களில் விவரித்துள்ளார். அந்தவகையில் ஒரு ரசிகராக தனது நாயகனை எந்த அளவுக்கு சிறப்பாக காட்ட முடியுமோ அவ்வளவு சிறப்பாக காட்டியிருந்தார். இது பேட்ட படத்தில் கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை காண்பித்து அதை விட பல மடங்கு சிறப்பாக இருந்தது என்பது திரைப்படத்தில் கேட்கும் விசில் சத்தங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
To Top