Connect with us
Cinemapettai

Cinemapettai

vikram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

5 வருடங்களாக வியாபாரம் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் விக்ரம் படம்.. படுதோல்வி தான் காரணமா?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து மிகவும் ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரம். சிறிய படமோ பெரிய படமோ உழைப்பு ஒன்றுதான் என்பதை படத்திற்கு படம் நிரூபித்து காட்டுபவர்.

அந்த வகையில் இயக்குனர் ஷங்கருக்கு மிகவும் பிடித்த நடிகர் விக்ரம் தான். அந்நியன் படத்திற்கு பிறகு ஷங்கர் விக்ரம் கூட்டணியில் உருவான திரைப்படம் ஐ.

இந்த படத்துக்காக விக்ரம் எடுத்த ரிஸ்க் மற்ற நடிகர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. அதேபோல் அந்த படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது.

கூனன் கதாபாத்திரத்திற்காக மொத்த உடல் எடையையும் குறைத்து அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டியவர் விக்ரம். அப்படி பார்த்து பார்த்து உருவான இத்திரைப்படம் பெரிய அளவில் வசூல் செய்யாதது அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெரிய நஷ்டத்தை சந்தித்தது இந்த படத்தின் மூலம்தான் என்பதை ஏற்றுக் கொள்ள யாருக்கும் மனது வராது. தமிழ் சினிமாவில் பெரிய அளவு வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் மற்ற மொழிகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியது.

குறிப்பாக தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது இந்த படம்.

அதனால் 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் தெலுங்கு சேட்டிலைட் உரிமம் வியாபாரம் ஆகாமல் இருந்தது. ஆனால் தற்போது தெலுங்கு உரிமையை சுமார் 5 கோடி பணம் கொடுத்து வாங்க ஒரு நிறுவனம் ரெடியாக இருக்கிறது.

இதனையறிந்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் உடனடியாக அதற்கான வேலைகளில் இறங்கி விட்டாராம். விரைவில் தெலுங்கில் முன்னணி சேனலாக இருக்கும் ஒரு சேனலில் ஐ படம் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top