Connect with us
Cinemapettai

Cinemapettai

vikram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

4 வருடங்களாக கிடப்பில் கிடந்த விக்ரம் படம் OTT ரிலீஸ்.. ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருந்த படத்துக்கு இந்த நிலைமையா?

விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து மேலிருந்த அபார நம்பிக்கையால் விக்ரம் 7 கெட்டப்புகளில் நடித்துள்ள கோப்ரா படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

ஆனால் விக்ரம் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை படப்பிடிப்பில் இருக்கும் படம் ஒன்று இறுதிக் கட்டத்தை எட்டியதை தொடர்ந்து தியேட்டரை நம்பினால் வேலைக்கு ஆகாது என நேரடியாக OTT தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து கொண்டிருந்த திரைப்படம்தான் துருவ நட்சத்திரம். ஏகப்பட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் சொந்தமாக தயாரித்தார் கவுதம் மேனன். சொந்தத் தயாரிப்பு என்பதால் படத்தின் கதையை முழுவதுமாக முடிக்காமல் பாதியிலேயே படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார்.

இறுதியில் படத்தின் கிளைமேக்ஸ் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் மற்ற நடிகர்களும் இவரை நம்பினால் வேலைக்கு ஆகாது என அடுத்தடுத்த படங்களுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் ஒரு வழியாக துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.

விக்ரம், கவுதம் மேனன் மீது கொஞ்சம் அதிருப்தியில் இருந்ததால் படத்தின் மீது பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. ஆனால் தொடர் தோல்விகளின் காரணமாக கௌதம் மேனன் படம் ஓரளவு வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என அந்த படத்திற்கு உதவ விக்ரம் முன் வந்திருக்கிறார்.

எடிட்டிங் முடிந்த நிலையில் டப்பிங் பணியை முடித்து கொடுத்தால் படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என கவுதம் மேனன் சொன்னதை அடுத்து விக்ரம் டப்பிங் செய்து கொடுத்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

அனேகமாக இந்த வருட இறுதியில் இந்தப் படம் நேரடியாக OTT தளங்களில் வெளியாகி அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading
To Top