விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.? இது தான் கமல் 30 வருடத்திற்கு முன்னாடியே நடித்து விட்டாரே!

விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இதுவரை இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது விக்ரம் படத்திற்கும் அதே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் விக்ரம் படத்திற்காக லோகேஷ் தேர்வு செய்துள்ள நடிகர்களாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என முன்னணி நடிகர்களை களத்தில் இறக்கியுள்ளார்.

முன்னதாக வெளியான தகவலின்படி கமல்ஹாசன் இந்த படத்தில் தேனி மாவட்டத்தில் வசிக்கும் தாதாவாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இவருடைய கதாபாத்திரம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி விக்ரம் படத்தில் கமல்ஹாசன் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக விக்ரம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசரில் உள்ள அம்சங்களை கூறுகின்றனர்.

டீசரில் கமல்ஹாசன் தன்னை சுற்றி கேட்கும் ஒலியை வைத்து மட்டுமே செயல்படுவார். அவருடைய கண்களும் அசைவற்றும் இருக்கும். இதனால் இந்த தகவலை பலரும் உறுதி செய்துள்ளனர்.

ஏற்கனவே கமல்ஹாசன் ராஜ பார்வை படத்தில் பார்வையற்ற இளைஞராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் விக்ரம் படத்துக்கும், ராஜ பார்வை படத்துக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

kamal-vikram-cinemapettai
kamal-vikram-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்