Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரச்சினையில் விக்ரம் படம்! ரிலீஸ் ஆகுமா?
தினமும் ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் தயாரிப்பாளர்கள் பொழப்பு சொன்னால் புரியாது. அப்படி ஒரு அச்சத்தை கொடுத்துவிட்டார் ஆரா சினிமாஸ் மகேஷ் தமிழில் சாமி 2 படத்தை வாங்கி இருக்கிறார் இந்த படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கு ஒன்பது கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார் ஆனால் அவர் விற்றதோ பத்தரை கோடி ரூபாய். ஆனால் அவர் தயாரிப்பாளருக்கு கொடுத்தது அதில் பாதிப் பணம் கூட இல்லை.
இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் ஷிபு தமீம், மகேஷ்க்கு சாமீ 2 படம் பிரமோஷனுக்காக ஒரு மெடீரியல் கூட குடுக்கவில்லை மேலும் ஒரு எம் எல் ஏ உதவியோடு தயாரிப்பாளரை மடக்கிய மகேஷ் அப்படியே அவரை அழைத்துக் கொண்டு வடபழனி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போய் விட்டார்.
அங்கு ஒன்பது கோடிக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ஏழு கோடி என்று எழுத திட்டம் தீட்டியுள்ளார் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என மறுக்க அதற்கப்புறம் ஒரே சண்டை, கடைசியில் தயாரிப்பாளர் சங்கம் வந்து ஷிபுவை மீட்டுக் கொண்டு சென்றார்கள். இதனால் சாமி 2 படம் செப்டம்பரில் வரவிருந்தது அதனால் இப்பொழுது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
