Tamil Cinema News | சினிமா செய்திகள்
4வது முறையாக கமலுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.. விக்ரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி மற்றும் மாஸ்டர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இதேபோல் அவரது முதல் படமான மாநகரம் படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் இவரது இயக்கத்தில் தற்போது விக்ரம் எனும் படம் உருவாகி வருகிறது. எனவே படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
விக்ரம் படத்தில் கதாநாயகி யார் என்ற கேள்வி நிலவி வந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா கவுரவ வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

vikram andrea jeremiah
எனவே அந்தபடத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் அவர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளனர். ஆனால் அவர் தேதி காரணமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் விதமாக ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற ஆடை அணிந்து பதிவிட்டுள்ள பதிவில் ‘கோடு ரெட்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
விக்ரம் பட போஸ்டரில் சிவப்பு நிற புள்ளிகள், படத்தின் பெயருக்கு மேல இருக்கும். ஆண்ட்ரியா கோடு ரெட் என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் விக்ரம் படத்தில் அவர் நடிப்பதை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
