10 இடங்களில் வெட்டித் தூக்கிய சென்சார் போர்டு.. விக்ரம் படத்தில் நீக்கப்பட்ட முக்கிய காட்சிகள்

கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விக்ரம் திரைப்படம் வெளிவருவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விக்ரம் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதுதவிர படத்தில் சில முக்கிய காட்சிகளின் நீளமும் குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்து பேசப்படும் வசனம் நீக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று இந்த திரைப்படம் ஆக்சன் திரைப்படம் என்பதால் சில வன்முறை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. அந்தவகையில் படத்தில் பல வன்முறை காட்சிகளின் நீளமும் குறைக்கப்பட்டுள்ளது.

அதிலும் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரைலரில் வில்லனாக இருக்கும் விஜய்சேதுபதி ஒருவரை ரொம்பவும் ஆக்ரோஷமாக கத்தியால் சரமாரியாக குத்திக் கொல்வது போன்று காட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த காட்சியின் நீளம் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் கமல் இந்த படத்தில் ஆபாசத்தை குறிக்கும் விதமாக பேசி இருக்கும் சில காட்சிகளும் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் கதைக்குத் தேவையான பட்சத்தில் இருக்கும் சில ஆபாச மற்றும் தகாத வார்த்தைகளை மியூட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர படத்தில் இன்னும் சில வன்முறை காட்சிகளின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தை சென்சார் போர்டு பார்த்து பார்த்து கத்தரி போட்டு உள்ளது. அப்படிப் பார்த்தால் விக்ரம் திரைப்படத்தில் கிட்டத்தட்ட 10 இடங்களில் காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளது.

இதனால் படத்தின் நீளம் சில நிமிடங்கள் குறைந்துள்ளது. ஆனாலும் முக்கிய காட்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் குறையாமல் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்