5 நாட்களில் பின்னிப் பெடலெடுக்கும் விக்ரம் படத்தின் வசூல்.. இத்தனை கோடியா!

நான்கு வருடங்களுக்குப் பின் திரையில் தோன்றிய உலகநாயகன் கமலஹாசன் பார்ப்பதற்காகவே திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் படம் ரிலீஸ் ஆனா ஜூன் 3 ஆம் தேதி முதல் இன்று வரை அமோக வரவேற்பை கொடுத்துக் கொண்டிருப்பதால், ஆடாமல் அசராமல் தியேட்டர்களில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கமல்ஹாசன் உடன் பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, மகேஸ்வரி, மைனா நந்தினி, சிவானி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கின்றனர். விக்ரம் படம் ரிலீஸாகி இன்னும் ஒரு வாரமே ஆகாத நிலையில் ஐந்து நாட்களில் மட்டும் உலக அளவில் 200 கோடி வசூலை ஈட்டி பின்னிப் பெடல் எடுத்துள்ளது.

விக்ரம் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 7.95 கோடி வசூல் செய்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளில் தமிழகத்தில் 23.5 கோடியும், உலக அளவில் 90 கோடியை எட்டியது. இதைத் தொடர்ந்து மூன்றாவது நாளில் உலக அளவில் 150 கோடி வசூலானது.

முதல் நான்கு நாட்களில் மட்டும் தமிழகத்தில் 77 கோடியும், உலக அளவில் 175 கோடியையும் வசூல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஐந்தாவது நாளான நேற்றைய தினத்துடன் விக்ரம் இதுவரை உலக அளவில் 200 கோடிக்கும் மேல் வசூலாகி கொண்டிருக்கிறது.

இப்படி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் விக்ரம் படத்தின் வசூல், ஒரு வாரத்திற்கு உள்ளேயே 200 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில் இந்த நிலைமை தொடர்ந்தால் கூடிய விரைவில் 500 கோடியை அசால்டாக தாண்டும் என திரைத்துறையினர் விமர்சிக்கின்றனர்.

120 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் இதுவரை வெளியான கமல் படங்களை காட்டிலும் விக்ரம் திரைப்படம் கமலஹாசனை பாக்ஸ் ஆபீஸ் நடிகர்களான விஜய், அஜித், ரஜினி இவர்களது லிஸ்டில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்