விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு.. வேற லெவல் இருக்கும் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில்

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் விக்ரம். படத்தில் விஜய்சேதுபதி, ஃபஹத்பாசில், அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும், பலரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்திற்கும் அதே அளவிலான எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில், கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் ‘டெஸ்ட் ஷூட்’ சென்னையில் நடந்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் விக்ரம் படம் அரசியல் த்ரில்லர் எனவும், படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரே அட்டவணையில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

vikram 1st look
vikram 1st look

விக்ரம் படத்திற்கான டெஸ்ட் ஷூட் முடிவடைந்துள்ள நிலையில், இன்று படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் #VikramFirstLook என்ற ஹேஸ்டேகில் கொண்டாடி வருகின்றனர்.

கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஆகிய மூவரின் நடிப்பும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்களை நடிகர்கள் என்று அழைப்பதை விட நடிப்பு வெறியர்கள் என்று அழைக்கலாம். அந்த அளவிற்கு இவர்களின் நடிப்பு யதார்த்தமாக இருக்கும். எனவே இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்