Videos | வீடியோக்கள்
தலையில் கொம்புடன், புல்லட்டில் கெத்தாக வரும் சியான் விக்ரம்.. புது பட மோஷன் போஸ்டர் வீடியோ
By
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. விக்ரம் வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ஒன்றில் நடித்து வருகிறார். இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் துருவ் விக்ரம் இப்படத்தில் நடித்து வருகிறார்.

mahaan
விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் நடித்துள்ளதால் இப்படத்தின் கதையை பலரும் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் கார்த்திக் சுப்பராஜ் ஆக்ஷன் படங்களை சமீப காலமாக எடுத்து வருவதால் இருவரும் ஆக்ஷனில் மிரட்டி இருப்பார்கள் எனவும் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் இருவரும் இணைந்து இருந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தற்போது படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
