‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.டப்பிங் ஆரம்பித்துள்ளனர்.

vikram

விக்ரமோ, கௌதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்க வெளிநாட்டுக்குப் போய்விட்டார். பின்னர் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியாமல் மாதக்கணக்கில் இழுத்துக் கொண்டே போனதால் ஸ்கெட்ச் படப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

டப்பிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை குறுகிய காலத்தில் முடித்து இப்படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர். விக்ரம் நடிப்பில் கடைசியாக ‘இருமுகன்’ படம் சென்ற ஆண்டு செப்டம்பரில் வெளியானது. ஒரு வருடத்திற்குப் பிறகு வெளிவரும் இந்தப் படத்தை விக்ரம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

அதிகம் படித்தவை:  "ஏத்திக்க ஏத்திக்க" விஜய் தேவர்கொண்டா – NOTA பட பாடல் லிரிகள் வீடியோ !
Sketch

விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து செய்பவர். அப்படி இவர் எடுத்த முயற்சி தான் கரிகாலன்.

இப்படத்தை பிரபல அனிமேஷன் நிறுவனத்தை வைத்திருக்கும் எல்.ஐ.கண்ணன் தான் இயக்கவிருந்தார், இப்படத்திற்காக 45 நாட்கள் முழுவதும் க்ரீன் மேட் போட்டு எடுத்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  கஸ்தூரி ராஜா இயக்கும் ஹாரர் படம் "பாண்டி முனி" ! போட்டோவில் உள்ள அகோரி யார் தெரியுமா ?

அத்தனை நாள் எடுத்தே 2 நிமிடக்காட்சி தான் வந்ததாம், மேலும், ஹாலிவுட்டில் வெளியான 300 போல் இப்படம் உருவாக இருந்ததாம்.

karikalan

ஆனால், இரண்டு நிமிடக்காட்சிக்கே இத்தனை நாட்கள் எடுக்க, முழுப்படம் முடிய வருடக்கணக்கில் ஆகும். மேலும், படத்தின் பட்ஜெட்டும் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி 350-400 கோடியை எட்டிவிடும்.

அப்படியே முடிந்து வெளியே வந்தாலும் தயாரிப்பாளருக்கு லாபம் தருமா? என்று தெரியவில்லை என, இப்படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார்களாம்.