வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இளம் இயக்குனர்களுடன் கை கோர்க்கும் விக்ரம்.. பார்க்கிங் Vs மாவீரன்

நடிகர் விக்ரமுக்கு கடந்த சில வருடங்கள் போராட்டக்களங்களாக தான் இருந்துள்ளது. நன்றாக நடித்தும் படங்கள் ஓடவில்லை. கடின உழைப்புக்கு பெயர் போனவர் பீல்டு அவுட் ஆகும் நிலையில் இருப்பது பார்பதற்க்கே கவலையாக உள்ளது. ஒரு காலத்தில் பல commercial ஹிட் கொடுத்தவருக்கா இந்த நிலைமை என்று அதிர்ச்சியாகவும் உள்ளது.

தங்களான் படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் விக்ரம். இருந்தபோதிலும் படம் சரியாக போகவில்லை. எதிர்பார்த்த வசூல் செய்யவில்லை. இது ஒரு கம் பேக் படம் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த விக்ரமுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்க்கு நடுவில், விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படமும் வெளியாகாமல் கிடப்பில் கிடக்கிறது.

மேலும் விக்ரம் தற்போது வீர தீர சூரனை தான் பெரும் அளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து அடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறார். மேலும் இளம் இயக்குனர்களுடன் கை கோர்க்கும் முடிவை எடுத்துள்ளார். அப்படி இரண்டு இயக்குனர்களை கூப்பிட்டு கதை கேட்டுள்ளார் விக்ரம்.

பார்க்கிங் vs மாவீரன்

ஹரிஷ் கல்யானை வைத்து ஒரு சிம்பிள் கான்செப்டில் படம் எடுத்து வேற லெவல் ஹிட் கொடுத்தவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். பார்க்கிங் படம் ஆகச்சிறந்த படமாக பல மொழி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டது.

இப்படி இருக்க இயக்குனர் ராம்குமார் பாலக்ரிஷ்ணனை அழைத்து அடுத்த படம் பற்றி பேசி இருக்கிறார் நடிகர் விக்ரம். மேலும் ராம்குமார் சொன்ன கதை விக்ரமுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும் மாவீரன் படத்தை எடுத்த அஸ்வின் மடோனையும் அழைத்து பேசியுள்ளார். இவரிடமும் கதை கேட்டு உள்ளார். அதுவும் விக்ரமுக்கு பிடித்துள்ளதாம். ஆனால் அஸ்வின் அடுத்ததாக ஒரு பாலிவுட் படம் எடுக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் யார் கதையில் முதலில் விக்ரம் நடிப்பார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

Trending News